சஜித்தைக் கைவிடத் தீர்மானித்துள்ள கட்சியின் சிரேஷ்ட குழு

Prathees
2 years ago
சஜித்தைக் கைவிடத் தீர்மானித்துள்ள கட்சியின் சிரேஷ்ட குழு

சர்வ கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக சமகி ஜன பலவேகய கட்சியில் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற்றுள்ளன.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், கூட்டாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியில் உள்ள பெருந்தொகையானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இத்தருணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும், இல்லையேல் தமது அரசியலை மக்களால் நிராகரிக்க நேரிடும் எனவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் பெரியோர்கள் குழுவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வ  கட்சி அரசாங்கத்தில் இணைய வேண்டாம் என கட்சி தீர்மானித்தால், தனிப்பட்ட மட்டத்தில் அரசாங்கத்தில் இணையப்போவதாக கட்சியின் உயர்மட்ட சிரேஷ்டர்கள் உட்பட குழுவொன்று ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!