தாய்லாந்தை சென்றடைந்தார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக இன்று (11) லங்கை நேரப்படி இரவு 7.30 மணியளவில் பேங்கொக் வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து வாடகை விமானம் மூலம் பேங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்றும், தற்காலிகமாக மட்டுமே தங்கியிருப்பார் என்றும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது ஒரு மனிதாபிமான பிரச்சினை என்பதில் உடன்பாடு உள்ளது, இது ஒரு தற்காலிக தங்குமிடம்" என்று பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்ச எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியாது என்று பிரயுத் கூறினார்.