காட்டு யானைகள் சுற்றித் திரியும் பிரதேசங்களை இனங்காணப்பதில் சிக்கல்- விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

Mayoorikka
1 year ago
காட்டு யானைகள் சுற்றித் திரியும் பிரதேசங்களை இனங்காணப்பதில் சிக்கல்- விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

காட்டு யானைகள் சுற்றித் திரியும் பிரதேசங்களை இனங்காணப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டு இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக்கவால் எழுப்பப்பட்டு இருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காட்டு யானைகள் காட்டு யானைகளுக்கான பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றன. அவ்வப்போது சில பிரதேசங்களில் சுற்றித்திரிவதால் அந்த பிரதேசங்களை இனங்காண்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின்படி 150 யானைகள் புத்தளம் மாவட்டத்தில் அலைந்து திரிவதாக அறியக்கிடைத்தது.

புத்தளம் மாவட்டத்தில் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 50ஆகும். இவர்களில் 25 பேர் யானைகள் நடமாடித் திரியும் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உதவுவதற்காக இரண்டு சாரதிகள் மற்றும் மேலும் உதவியாளர்களும் நியமிக்க்பட்டுள்ளனர்.

காட்டு யானைகளை விரட்டியடிக்கும் பணிகளில் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

போதுமான உத்தியோகத்தர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிகளில் ஈடுபடுத்தி இருக்கின்றோம்.

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அளப்பரிய பணிகளை ஆற்றி வருகின்றனர். பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

இதற்கு சிறிது காலம் தேவைப்படுகின்றது.