பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் ரணில் சந்திப்பு
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸுடன் இரு தரப்பு கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் தலைநகர் மணிலாவில் உள்ள மலாகானாங் மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று மணிலாவில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது ஆளுநர் கூட்டத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.