அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி ரத்து செய்யப்பட இதுதான் காரணம்

Prathees
1 year ago
 அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி  ரத்து செய்யப்பட இதுதான் காரணம்

ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய தீர்மானம் பொது பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்டதே தவிர ஜனாதிபதி அலுவலகம் அல்ல.

அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை வெளியிடும் சட்டத்திற்கு பதிலாக, சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்காமல் வேறு சட்டத்தின் மூலம் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தன.

வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம் கலக்கமடைந்தது.

அதன்படி, தேவையற்ற பிரச்னைகளை உருவாக்காமல் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

அரசாங்கம் போராட்டத்தை அடக்கினாலும் எதிர்காலத்தில் மக்களின் எதிர்ப்பு வலுக்கக் கூடும் எனவே அடக்குமுறைக்கு மாற்று வழிகள் தேவை என பொஹொட்டுக்குள் இருந்து வரும் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஜனாதிபதி செயற்பட விரும்புகின்றார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.