உள்நாட்டில் தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருள் வரிகளும் தள்ளுபடி

Prathees
1 year ago
உள்நாட்டில் தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருள் வரிகளும் தள்ளுபடி

பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுமிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதிசெய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை அதிக விலைக்கு வாங்குவதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு இறக்குமதி செய்யப்படும் 05 முக்கிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இறக்குமதி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு வரிச்சலுகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, இந்த வரிச்சலுகைகளுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட ஒரு பேக்கின் விலை 50-60 ரூபாய் வரை குறையும் மற்றும் அதன் அதிகபட்ச சில்லறை விலை 260-270 ரூபாயாக இருக்கும். மேலும் இறக்குமதி செய்யப்பட்ட முடிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18% அல்லது 19% குறையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வரிச்சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது உற்பத்தியாளர்கள் உரிய வரிச்சலுகைகளை பெற தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.