ராஜபக்சர்கள் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Kanimoli
2 years ago

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதியை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரி, ராஜபக்க்ஷ சகோதரர்கள் தொடர்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



