கசிப்பு உற்பத்தி செய்த பாடசாலை அதிபர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது

Kanimoli
2 years ago
  கசிப்பு உற்பத்தி செய்த பாடசாலை அதிபர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது

  கசிப்பு உறபத்தி செய்த பாடசாலை அதிபர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் ஊவா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, குறித்த பாடசாலை அதிபர் கசிப்பு தயாரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதிபரை பதவி நீக்கியதுடன், அவர் குறித்த விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கசிப்பு பாவனை மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பதுளை மாவட்ட அரச பாடசாலை அதிபர் ஒருவர் குறித்த தகவல், பொலிசாருக்கு கிடைக்கவே விரைந்த பொலிசார் இரண்டு போத்தல் கசிப்புடன், அதிபர் கைது செய்யப்பட்டார்.

கைதான அதிபரிடம் விசாரணை மெற்கொண்டபோது தமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த பொருளாதார வசதியின்மையினால், கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டதாக, பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெலவிற்கு கிடைத்த அறிவிப்பையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தமக்கு அறிக்கை உடன் சமர்ப்பிக்கும்படி, வலயக்கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!