யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மீட்பு!

Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார்.
இது குறித்து மானிப்பாய் பொலிசாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிசார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர்.

இந்தநிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்று காலை 6 மணி முதல் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது, 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!