ஐ.தே. கட்சியின் தலைமையகத்தை சிறிகொத்தவில் வேறொரு இடத்தில் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Kanimoli
1 year ago
ஐ.தே. கட்சியின் தலைமையகத்தை சிறிகொத்தவில் வேறொரு இடத்தில் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

ஐ.தே. கட்சியின் தலைமையகத்தை சிறிகொத்தவில் வேறொரு இடத்தில் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டையில் உள்ள தற்போதைய சிறிகொத்த கட்டிடம் 1980 களின் முற்பகுதியில் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன (J R Jayewardene)  தலைமையில் கட்டப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் (Ranil Wickremesinghe) கலந்துரையாடியதாகவும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அலுவலகம் அமைந்துள்ள ராஜகிரியில் உள்ள காணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை மாற்றுவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய காணியில் பல மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முதலீட்டாளர் ஒருவரை நியமிப்பதற்கும் மேற்படி கட்டிடத்தின் இரண்டு அல்லது மூன்று மாடிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த தலைமையகத்தை அமைப்பதற்கும் யோசனை இருப்பதாக அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.