நாட்டில் சினிமா பாணியில் நடந்த திருமணம்
மினுவாங்கொட பிரதேசத்தில் இன்று திருமண ஆடை அணிந்த இளம் பெண் ஒருவர் திடீரென அந்தப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.
இன்று தன்னுடன் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையில் இளைஞனை அவரது பெற்றோர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர் என குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் மற்றும் அவர் திருமணம் செய்யவிருந்த இளைஞனின் பெற்றோர் ஆகிய இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் 24 வயது ஜோடி இன்று வீட்டை எதிர்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
குடியிருக்க வாடகை வீடு கிடைத்ததையடுத்து, இன்று திருமணத்தை பதிவு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். மணமகள் ஆடை அணிந்து காதலனுக்காக பெண் காத்திருந்த நிலையில் அவர் வரவில்லை. பின்னர், காதலனின் உறவினர்கள் அவரை வீட்டில் அடைத்து வைத்ததாகக் கேள்விப்பட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அந்த இளைஞனும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இருவரும் சரியான வயதை எட்டியுள்ளதால் அவர்களது முடிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பொலிஸார் உறவினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கமைய, உறவினர்கள் கலைந்து சென்றதுடன், காதலர்கள் பொலிஸ் புத்தகத்தில் கையெழுத்திட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்