அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளார்
Kanimoli
2 years ago
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அந்தக் காலப்பகுதியில் விவாதத்தை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், ஆளும் கட்சியின் பிரதி பிரதம அமைப்பாளர் சாகர காரியவசத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
22வது அரசியலமைப்பு விவாதத்தின் பின்னர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுன ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.