திலினி பிரியமாலியிடம் சிக்கிய பொலிஸ் அதிகாரிகள்
சர்ச்சைக்குரிய மோசடியாளராக சந்தேகிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி நிறுவனத்தில் மேலதிக பணியாக கடமையாற்றியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என சிரேஷ்ட பாதுகாப்பு பேச்சாளர் ஒருவர் அதெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் போது பிரிவு குழுக்களுக்கு யாராவது அழுத்தம் கொடுத்தால் அவர்கள் மீது கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி நிறுவனத்துடன் சில பொலிஸ் அதிகாரிகள் நடத்திய உரையாடல்களின் மூலம் தகவல்களை வெளிக் கொண்டுவர பொலிஸ் அதிகாரிகளிடம்விசாரணை நடத்தப்படும் என அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிதி நிறுவனம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள், கணனி தகவல்கள், வங்கிக் கணக்குத் தகவல்கள் என்பன இரகசிய பொலிஸ் விசாரணைகளுக்கு மிகவும் முக்கியமானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.