மகிந்தானந்தவிற்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் சிஐடியில் முறைப்பாடு
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இரகசியத் தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளிப்படுத்தியமை தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஐந்து பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (17) காலை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடந்த சில தினங்களாக மஹிந்தானந்த அளுத்கம நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த தகவலின்படி உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சில வரி செலுத்துவோரின் வரிக் கோப்புகள் மற்றும் வரிக் கணக்குகள் உட்பட பல இரகசியத் தகவல்கள் வெளி தரப்பினருக்கு அங்கீகாரம் இன்றி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என
உள்நாட்டு வருவாய் சேவைகள் சங்கத்தின் இணைச் செயலாளர் உதயசிறி இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தி சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
உள்நாட்டு இறைவரி சேவை சங்கம், உள்நாட்டு இறைவரி ஆணையாளர்கள் சங்கம், உள்நாட்டு இறைவரி ஊழியர் சங்கம், உள்நாட்டு இறைவரி பொது ஊழியர் சங்கம், உள்நாட்டு இறைவரி நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் ஆகிய ஐந்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இதற்காக இணைந்து கொண்டதாக உதயசிறி மேலும் தெரிவித்தார்.