எட்டரைக் கோடிரூபா மோசடி செய்தார்: பிரியமாலிக்கு எதிராக அசாத் சாலி முறைப்பாடு
திலினி பிரியமாலி என்ற பெண் தனக்கு எட்டரை மில்லியன் ரூபா பணம் தருவதாக உறுதியளித்ததாக மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (17ஆம் திகதி) முறைப்பாடு செய்துள்ளார்.
தொழிலுக்காக பணத்தை முதலீடு செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் குறித்த பணத்தை திலினி பிரியமாலி என்ற பெண்ணுக்கு சொந்தமான உலக வர்த்தக நிலையத்தில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அசாத் சாலியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் திரு. ஆசாத் சாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்து முறைப்பாடு செய்தார்.
இதன்படி, திலினி பிரியமாலிக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
திலினி பிரியமாலி என்ற பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பெறுமதி கிட்டத்தட்ட 350 கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.