இலங்கையின் தற்போதைய நிலைமை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் டீவன்ஸுடன் கலந்துரையாடல்

Kanimoli
2 years ago
இலங்கையின் தற்போதைய  நிலைமை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் டீவன்ஸுடன் கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் டீவன்ஸுடன் கலந்துரையாடியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். .

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், தகவல் அதிகாரி திருமதி டிரிவன் ஆங்கரேஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!