கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய தகவல்
Kanimoli
2 years ago
கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட செல்பவர்களுக்கு முக்கிய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பார்வையாளர்களுக்காக தாமரை கோபுரத்தை திறக்கும் நேரம் மீண்டும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பார்வையாளர்கள் இரவு 10 மணி வரை தாமரை கோபுர வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும்.
குறித்த இரண்டு நாட்களிலும் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.