நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்க்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை - ரணில்
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்க்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான காலம் இரண்டரை வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அதனை நான்கரை வருடங்களாக அதிகரித்ததாகவும் அது குறித்து 22 ஆம் திருத்தச்சட்டத்தில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாமை குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரிடம் வினவியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, " நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமாயின் அதனை நான் மேற்கொள்ள வேண்டும். அதற்கான எந்தவித தயார் நிலையும் தற்போதைய நிலையில் இல்லை ", எனக் குறிப்பிட்டார்.