கடன் வழங்கிய நாடுகளுக்கிடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யும் ஜப்பான்
Mayoorikka
2 years ago
இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுக்கு இடையிலான சந்திப்பை ஒழுங்கு செய்ய ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான பிரயத்தனங்களை அந்த நாட்டு அரசாங்கம் முனைப்புடன் முன்னெடுத்து வருவதாக த ஜப்பான் நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் ஜப்பானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு பிரதமர் பியுமோ கசிடோவுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது, கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமரிடம் கோரியிருந்தாக அந்த நாட்டு அரசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது, கடன் செலுத்தல்களை குறைப்பது, திருப்பிச் செலுத்தும் கால எல்லையை ஒத்தி வைப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.