துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தை உட்பட மூவர் காயம்
Kanimoli
2 years ago
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் யக்கலமுல்லையில் இடம்பெற்றுள்ளது.
யக்கலமுல்லை களுவலகல பகுதியில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது 3 வயது குழந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.