பூசணி பயிரிட்ட விவசாயி ஒருவர் 17 இலட்சம்ரூபாவை வருமானமாக பெற்றுள்ளார்.

Kanimoli
2 years ago
 பூசணி பயிரிட்ட விவசாயி ஒருவர் 17 இலட்சம்ரூபாவை வருமானமாக பெற்றுள்ளார்.

பொலன்னறுவையில்,  பூசணி பயிரிட்ட விவசாயி ஒருவர் 17 இலட்சம்(1.7 மில்லியன்) ரூபாவை வருமானமாக பெற்றுள்ளார்.  

பொலன்னறுவை மகாவலி B வலயத்தின் நாகஸ்தன்ன கிராமத்தில் ஒரு ஏக்கரில் இந்த விவசாயி பூசணி (வட்டக்காய்) பயிர் தெரிவித்துள்ளார். 

பூசணி அறுவடையிலிருந்து இரண்டரை மாதங்களுக்குள் அவருக்கு இந்தத் தொகை கிடைத்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாமர சேனாரத்ன என்பவரே இரண்டரை மாதங்களில் பூசணி அறுவடை மூலம் இத்தொகையை வருமானமாக பெற்றதாக பிரதேச விவசாய முகாமையாளர் விஜேசுந்தர தெரிவித்தார்.

தான் சுமார் ஒரு ஏக்கரில் பூசணி விதைகளைப் பயிரிட்டு, தம்புள்ளை சந்தைக்கு ஒரு கிலோகிராம் பூசணிக்காயை 160 ரூபாவுக்கு விற்றதாகவும், இரண்டரை மாதங்களுக்குள், பூசணி அறுவடையில் மேற்படி தொகையை ஏறக்குறைய பெற்றுக்கொண்டதாக அந்த விவசாயி தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!