பொன்னியின் செல்வன் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்ற மஹிந்த மற்றும் ஷிரந்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட நேரம் ஒதுக்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது மனைவி ஷிரந்தி மற்றும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
மணிரத்னத்தின் காவிய வரலாற்று நாடகம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.
கமல்ஹாசனின் விக்ரமை முந்தி தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறிய பின்னர், தமிழகத்தில் 200 கோடி ரூபாவை தாண்டிய சாதனையை பொன்னியின் செல்வன் அடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் செப்டம்பர் 30ம் தினதி வெளியானது.
முதல் நாளில் இந்த படம் உலகளாவிய ரீதியில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.