திலினி பிரியமாலியுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள் பெயர்கள் கண்டுபிடிப்பு

Kanimoli
2 years ago
திலினி பிரியமாலியுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள் பெயர்கள் கண்டுபிடிப்பு

மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திலினி பிரியமாலியுடன் நெருக்கமாக இருந்த பொலிஸார், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பிரபல நடிகைகளின் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் தெரியாத பல கோடீஸ்வரர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரியமாலிக்கு நெருக்கமாக இருந்த பொலிஸார், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் பல கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் திலினி பிரியமாலி எவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், குற்ற விசாரணை பிரிவினரால், கற்பனை கூட செய்து பார்க்க முடியாத விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திலினியின் கையடக்க தொலைபேசி மற்றும் பிற கணினி சாதனங்களை ஆய்வு செய்ததில் இது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபலங்களிடம் உதவி தேவைப்படும்போது அவர்களை மிரட்டி தனக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரியமாலி பிரபலங்கள் பேசும் உரையாடல்களை பதிவு செய்துவைத்திருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!