நாட்டில் இன்னும் பயங்கரவாதம் இருக்கிறது - குமார வெல்கம

Kanimoli
1 year ago
நாட்டில் இன்னும் பயங்கரவாதம் இருக்கிறது - குமார வெல்கம

நாட்டில் இன்னும் பயங்கரவாதம் இருப்பதாகவும் பயங்கரவாதிகளே தன்னை தாக்கியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் மீதான இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் மக்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தனர். 19வது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடைத்தது என நாங்கள் நினைத்தோம்.

நானும், நாங்களும் கைகளை உயர்த்தினோம். மைத்திரிபால சிறிசேன அனைவரது தோள்களிலும் கைகளை போட்டு, 19வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரினார்.

அந்த திருத்தச்சட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடைக்கும் என்பதால், நாங்கள் மிகவும் விருப்பத்துடன் வாக்களித்தோம். 19வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தால், மாற்றம் ஏற்பட்டதா?.

இல்லை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. இதனால் மக்கள் வெறுப்புக்கு உள்ளாகினர். 20வது திருத்தச் சட்டத்திற்கு நான் வாக்களிக்கவில்லை.

இரட்டை குடியுரிமை போன்ற பல விடயங்கள் இருந்தால், நான் வாக்களிக்கவில்லை. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு வர முடியும் என்ற சரத்து நீக்கப்பட்டுள்ளதால், 22 வது திருத்தச் சட்டத்திற்கு விருப்பமின்றியேனும் வாக்களிக்க முடியும். எனது நண்பர்கள்தான் ஆனால், உண்மையை கூற வேண்டும்.

இரட்டை குடியுரிமை என்பது இரண்டு நாடுகளின் குடியுரிமை. அந்த நபர் இலங்கையில் குற்றம் செய்து விட்ட அடுத்து நாட்டுக்கு தப்பிச் செல்ல முடியும். அதனை நாங்கள் விரும்பவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை பயங்கரவாத செயல் என இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவரும் கூறினர்.

ஆம் இது பயங்கரவாத செயல்தான். என்னையும் தாக்கினர். என்னை கடுமையாக தாக்கினர். என்னை தாக்கியவர்கள் பயங்கரவாதிகள். அப்படியானால், பயங்கரவாத செயலகள் நாட்டில் தற்போதும் இருக்கின்றது.

அப்படியானால், நாம் ஏன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்?. அதனை பயன்படுத்தி தவறான செயல்களை செய்வது தவறு. பயங்கரவாத செயல்கள் இன்னும் இருக்கின்றது என்பதை நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.