மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துஷ்பிரயோகம்
பொகவந்தலாவை - டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் பெண்ணை தாக்கியமை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சமபவத்தின் பின் தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். மது போதையில் வந்த மூவர் மேற்படி பெண்ணை துஷ்பிரயோகப்படுத்தி விட்டு தாக்கிய பின்னர் தலை மறைவாகியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண் காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர பொலிஸ் தொலைபேசி சேவைக்கு தகவல் வழங்கி அம்புலன்ஸ் வண்டியின் ஊடாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்ட நிலையில் , சந்தேகநபர்கள் மூவரும் டியன்சின் தோட்டத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைதான சந்தேக நபர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.