பண மோசடி செய்த வங்கி எழுத்தருக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை
Prathees
2 years ago
அரச வங்கியின் பிரதம எழுதுனர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியினால் 30 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்து வாடிக்கையாளரின் பணத்தை தனது கணக்கிற்கு திருப்பியது போன்ற குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
ஆனால், தண்டனையை 5 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
2002 ஆம் ஆண்டு அரச வங்கியொன்றின் கொலன்னாவ வங்கிக் கிளையில் பிரதம எழுத்தராக கடமையாற்றிய பிரதிவாதிக்கு எதிராக, 03 தடவைகளில் மற்றுமொரு கணக்கு வைத்திருப்பவரின் பணத்தை தனது சொந்தக் கணக்கிற்கு திருப்பியமை, போலி ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 09 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.