அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் - இராஜாங்க அமைச்சர்
Prasu
2 years ago
அழகுசாதன பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான மூலப்பொருள் இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக பல பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
முன்னதாக மேல்முறையீடுகளைத் தொடர்ந்து 700 தயாரிப்புகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இந்தநிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வாகன உதிரி பாகங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்தந்த துறையினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நீக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.