இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பதவி விலக வேண்டும்-சன்ன ஜயசுமண
இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்தநிலையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைத் தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தால் இன்று அங்கீகரிக்கப்பட்ட சட்டம் காரணமாக, இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடரமுடியாது. தடைசெய்யப்பட்டுள்ளது என்றார்.
எனவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்தால்; பதவி விலக வேண்டும் என்று சன்ன ஜெயசுமன குறி;ப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றில் இன்று 22 வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக முக்கியமாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபரும், அமரிக்க குடியுரிமையை கொண்டவருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராக தொடரமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.