இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தப்படும் செயற்பாடுகள் அதிகரிப்பு!
Reha
2 years ago
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்தப்படும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது
இந்த கடத்தல் தொடர்பில் இந்திய பிரஜைகள் மற்றும் இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு கடத்தல் அதிகரித்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சில கடத்தல்காரர்கள் இலங்கையை பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்தும் நிலைமை உள்ளதாக சுங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.