உல்லாசப் பயணங்கள் செல்பவர்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
Prathees
2 years ago
தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா செல்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபத்தான இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.