அழகுசாதனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

Prathees
2 years ago
அழகுசாதனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

அழகு சாதனப் பொருட்கள், கார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்களின் இறக்குமதித் தடைகள் அடுத்த இரண்டு வாரங்களில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் மக்களிடம் இருந்து வரும் தொடர்ச்சியான முறையீடுகளை கருத்திற் கொண்டு மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில் இந்தத் தடைகள் நீக்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

தற்போது நிலவும் பணப்பரிவர்த்தனை நெருக்கடி காரணமாக, 1465 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து, ஆகஸ்ட் 23ஆம் திகதி, அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து 708 விடயங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!