வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்கம்; அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளி!

Mayoorikka
2 years ago
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில்  தாழமுக்கம்; அடுத்த 12 மணித்தியாலத்தில் சூறாவளி!

கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தழமுகமானது கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 17 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) வலுவடைந்து, இன்று (23.10.2022) காலை 05.30 மணிக்கு அதே கடல் பிராந்தியத்தில் காணப்படுகிறது.

இது தற்போது Port Blair (Capital city of the Andaman Islands) இருந்து வட மேற்காக 580 கிலோமீற்றர் தூரத்திலும்  Sagar Island (West Bengal, India) இருந்து தெற்காக 700 கிலோ மீற்றர் தூரத்திலும் 
Barisal (South-central City, Bangladesh) இருந்து தெற்காக 830 கிலோ மீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் ஒரு சூறாவளியாக (Cyclonic Storm) மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அதன் பின்னர் இந்த சூறாவளியானது தொடர்ந்து தனது நகரும் திசையை மாற்றி, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி காலை வங்காளதேச கரையை TINKONA Island இற்கும் SANDWIP இற்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது ஒரு சூறாவளியாக வலுவடைந்ததன் பின்னர் இதற்கு தாய்லாந்து நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட சிட்ரங் (Sitrang - Pronounce as Si-Trang) என்னும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

இந்த சூறாவளியின் காரணத்தினால் இலங்கைக்கு நேரடியாக எந்தவித தாக்கமும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!