உணவு பொருட்களின் விலை குறையாமைக்கான காரணங்கள் தொடர்பில் சில்லறை வியாபாரிகள் வெளியிட்ட கருத்து!

Mayoorikka
1 year ago
உணவு பொருட்களின் விலை குறையாமைக்கான காரணங்கள் தொடர்பில் சில்லறை வியாபாரிகள் வெளியிட்ட கருத்து!

எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அண்மைக்காலமாக குறைக்கப்பட்ட போதிலும், அதன் நன்மைகள் இன்னும் நுகர்வோருக்குச் சென்றடையவில்லை. இதற்கு ஏனைய பொருட்களின்; விலையுயர்வுகளும் காரணம் என்று சில்லறை வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வாரம், தனியார் வர்த்தகர்களால் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தைக்கு வந்ததால், கோதுமை மாவின் மொத்த விலை 85 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதே வாரத்தில் 92 ஒக்டேன் பெற்றோல் 40 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 245ரூபா குறைக்கப்பட்டது, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலை முறையே 99 ரூபா மற்றும் 45ரூபாவால் குறைக்கப்பட்டது.

எனினும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை குறைந்தாலும் அன்றாட செலவுகள் அதிகரித்து வருகின்றமை காரணமாகவே வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு ஒரு கிலோ கோதுமை மா 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தட்டுப்பாடு காரணமாக முந்தைய மாதங்களில்,அது  420 ரூபாய் வரை உயர்ந்தது.
பின்னர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் வெண்ணெய் மற்றும் முட்டையின் விலை உயர்வாகவே உள்ளது என்று வெதுப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சில வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதும் ஒரு கிலோ மாவை 300 ரூபாய் கொடுத்து கறுப்புச் சந்தையில் கொள்வனவு செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்;.


எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை எனவே  முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை குறைக்கமுடியாது என்று அவற்றின் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வாரத்திற்கு ஐந்து லீற்றர் பெற்றோல் போதாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.பல்லி தெரிவித்துள்ளார். வாரத்திற்கு 125 கிலோமீட்டர் ஓட்ட இது போதுமானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாகன உதிரி பாகங்களின் விலைகள் 300 அதிகரித்துள்ள போதிலும் பராமரிப்பை தவிர்க்க முடியாது. எனவே கட்டணக் குறைப்புக்கு செல்லமுடியாது என்று அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.