நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியை ஆளில்லா விமானம் மூலம் புகைப்படம் எடுத்ததாக 7 பேர் கைது
விக்டோரியா அணை மற்றும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியை ஆளில்லா விமானம் மூலம் புகைப்படம் எடுத்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிகம மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்களாவர்.
சனிக்கிழமை (22) காலை அணைக்கட்டில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து தெல்தெனிய காவல்துறையிடம் ஒப்படைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி சுற்றுப்புறப் பகுதியில் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை எடுக்க வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு அறிவுறுத்திய போதிலும், அவர்கள் அந்த உத்தரவுகளை புறக்கணித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி நடந்து கொண்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன், தெல்தெனிய காவல்துறையினர் அவர்கள் பயணித்த வான் ,கமரா, ஆளில்லா விமானம் மற்றும் ரிமோட் கொண்ட்ரோலர் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.