சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு

Prathees
2 years ago
சுவாச நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிப்பு

இலங்கையில் சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.

நிலவும் காலநிலை, கிருமிகளின் அதிகரிப்பு, முகமூடி அணிதல் உள்ளிட்ட நல்ல சுகாதார பழக்கவழக்கங்களில் இருந்து விலகுவதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்பொழுதும் முகமூடி அணிவது சாத்தியமாயின் இந்நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் துஷாந்த மெத்கெதர மேலும் தெரிவித்தார்.

இன்புளுவன்சா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் சமூகத்தில் பரவலாக பரவி வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!