பெரஹெரவில் தீப்பந்தம் சுழற்றச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி பலி
வடுகுடா ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் கட்டின பிங்கம் பெரஹெரவில் தீப்பந்தம் சுழற்றச் சென்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடங்கொட,பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் தொடங்கொட, ஹர்மன்வத்தை, கட்டம் 1 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிஹான் கவிது விக்கிரமரத்ன என்ற இளைஞரே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்த இளைஞர் கட்டின பெரஹெராவில் தீப்பந்தங்களை சுழற்றிக்கொண்டிருந்தார்.
தீப்பந்தங்கள் பொருத்தப்பட்டிருந்த இரும்புத் தகடு தரையில் விழுந்து, அது மின்சார வயரில் சிக்கியதாகவும், அதனை மீண்டும் எடுக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் ஏனைய இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.