இலங்கையில் Disneyland ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் - டயானா கமகே
Kanimoli
2 years ago
இலங்கையில் Disneyland ஒன்றைக் உருவாக்குவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கணிசமான முதலீட்டாளர்கள் இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு டிஸ்னிலேண்டைக் கொண்டுவருவது தொடர்பிலும் என்னிடம் பேசப்பட்டது.
Disney Landயை இலங்கைக்கு கொண்டு வருவார்கள் என்று நம்புகிறார்கள். அதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என ராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த Disney Land ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் அது நிர்மாணிக்கப்பட்டால் தெற்காசியாவின் முதல் Disney Land ஆக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.