ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த சீனா முடிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை வாழ்த்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சீன மக்கள் கட்சி பொதுஜன பெரமுனவுடன் நட்பு மற்றும் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்த விரும்புவதாக சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.
முன்னதாக ஜி ஜின்பிங்கின் மறுதேர்தல், சீன மக்களுக்கு அவரது தலைமையின் வலிமை மற்றும் தைரியத்தை உறுதி செய்துள்ளது என்று ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
ஜி ஜின்பிங் தலைமையின் கீழ் சீனா பெரும் சாதனைகளை படைத்துள்ளது மற்றும் அவரது மறுப்பிரவேசம், சீன மக்களுக்கு வலிமை மற்றும் தைரியத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்று ராஜபக்ச ட்வீட் செய்துள்ளார்.
ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை சீனாவின் தலைவராக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வகையில் மூன்றாவது முறையாக பதவியேற்றார்.
இதன்படி அவர், இன்னும் ஐந்தாண்டு காலத்திற்கு பதவி வகிப்பார்