ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல் பசில் ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசம்

Kanimoli
2 years ago
ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல் பசில் ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கோ எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே இரட்டைக்குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்ற 22வது திருத்தச்சட்டத்தினால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 22வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் இரட்டை பிரஜாவுரிமையை கோட்டாபய ராஜபக்சவை போன்று இரத்து வேண்டும் என பசில் ராஜபக்சவுக்கு எதிராக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து குடும்பத்திற்குள் கடும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!