அஹுங்கல்ல சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
ஒக்டோபர் 12ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு II அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று (23ம் திகதி) வகொல்லவத்தை, குரெம்பொல, ரம்புக்கனை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவு என்ற முகவரியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி காலி கொழும்பு பிரதான வீதியில் உள்ள அஹுங்கல்ல ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக சந்தேகநபர்கள் வந்த காரை ஓட்டிச் சென்ற நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார். டி56 துப்பாக்கியால் அவர்களை கொல்ல முயன்றனர்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 41 வயதான ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.