ஹட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரதப் பாதையில் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்துள்ளது
Kanimoli
2 years ago
ஹட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரதப் பாதையில் பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக ஹட்டன் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் இன்று (24) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
நானு ஓயிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சரக்கு புகையிரதம் சரிந்து விழுந்த மண் மேட்டில் மோதியத்தில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேட்டை புகையிரத பராமரிப்பு பணியாளர்கள் அகற்றியதன் பின்னர், காலை 08.30 மணியளவில் மலையக புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடதக்கது.