அட்டாளைச்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது
Kanimoli
2 years ago
அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நபர் ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று (23) மாலை மேற்கொண்ட தேடுதலில் போதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வசம் இருந்து 9 கிராம் 880 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் அக்கரைப்பற்று காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.