கொத்மலை நீர்த்தேக்கத்திலும் வான்கதவு திறக்கப்பட்டுள்ளது
Prathees
2 years ago
கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் மேலும் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் தானாக திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்த்தேக்க அணைக்கு கீழே கொத்மலா ஓயாவின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
மேலும்இ மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் 03 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர நீர்த்தேக்கங்களும் தூர்வாரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.