சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சி

Kanimoli
2 years ago
சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சி

  சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளை உரிய முறையில் வழங்க முடிந்தமையினால் மீன் பிடிப்பு அதிகரிப்பு மற்றும் வலை மீன்பிடி அதிகரிப்பே காரணம் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் பேலியகொட மத்திய மீன் சந்தையில் நேற்றையதினம் விற்பனை செய்யப்பட்ட மீன் விலைகளின் விபரம்,

ஒரு கிலோ சூரை மொத்த விற்பனை விலை 650-700 ரூபா

தலபத் மற்றும் கெலவல்லாவின் மொத்த விலை கிலோ 1,300 ரூபா

ஒரு கிலோ கொப்பரா மீன் மொத்த விலை 2,000 ரூபா

ஒரு கிலோ கீரி மொத்த விற்பனை விலை 550-600 ரூபா

ஒரு கிலோ லின்னாவின் மொத்த விலை  ரூபா 800

ஒரு கிலோ கும்பளா மொத்த விற்பனை விலை 750 ரூபா

ஒரு கிலோ பெரிய கணவாய் மொத்த விற்பனை விலை 1,300 ரூபா

ஒரு கிலோ நடுத்தர அளவிலான கணவாயின் மொத்த விலை 900 ரூபா

ஒரு கிலோ இறால் மொத்த விற்பனை விலை 1,500-1,800 ரூபா

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!