சந்திரிக்காவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறைப்படுத்தப்பட்டிருந்த மூன்று பேரும் ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு

Kanimoli
2 years ago
 சந்திரிக்காவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறைப்படுத்தப்பட்டிருந்த மூன்று பேரும்  ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் சிறைப்படு;த்தப்பட்டிருந்த மூன்று பேரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின் 34ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. .
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பல கலந்துரையாடலின் பலனாக கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவர்கள் விடுவிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் இவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் கைதிகளில் மூவர் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அனுமதி கோரினார்
ஆவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதன்படி, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய நான்கு கைதிகளும் தண்டனை குறைக்கப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.
அமைப்புடன் தொடர்புடைய இரண்டு தமிழ் விடுதலைப் புலிகள் கைதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் திருமபப் பெறப்பட்டு மேலும் இரண்டு தமிழ் கைதிகள், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதில் 22 ஆண்டுகளை சிறையில் கழி;த்துள்ளனர்.
மற்றும் ஒரு கைதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதில் 11 வருடங்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.
இன்னுமொருவர் 19 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இதுவரை 11 வருடங்களை சிறையில் கழித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!