நாட்டில் இடம் பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் பலி

Kanimoli
2 years ago
நாட்டில் இடம் பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் பலி

நாட்டில் இடம் பெற்ற சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழந்ததுடன் அறுவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு 13 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 960 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களினால் 8 வீடுகள் முழுமையாகவும் 393 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!