மேற்கு அவுஸ்திரேலியர்களை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையின் சுற்றுலாத் தூதுவர் சனத் ஜயசூரிய வலியுறுத்து
Kanimoli
2 years ago
மேற்கு அவுஸ்திரேலியர்களை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கையின் சுற்றுலாத் தூதுவர் சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர், மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் தூதுவர் ரோஷ் ஜலகேயை இன்று பேர்த்தில் சந்தித்தார்.
பெர்த்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணத்தின் அவுஸ்திரேலிய- இலங்கை போட்டிக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மேற்கு அவுஸ்திரேலியர்கள் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சனத் ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்