தாய், தந்தை மற்றும் மகள் பயணித்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது

Prathees
2 years ago
தாய், தந்தை மற்றும் மகள் பயணித்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது

ஒரே குடும்பம் பயணித்த முச்சக்கரவண்டி இன்று  பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் கிடைத்து, நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற போது, ​​நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டியின் எஞ்சின் பக்கவாட்டில் இருந்து தீ பரவியுள்ளது. 

முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்த சிலர் தீயை பல்வேறு வழிகளில் கட்டுப்படுத்த முற்பட்ட போதும் முச்சக்கரவண்டியில் எரிந்துகொண்டிருந்த தீயை கடையின் ஊழியர் அருகில் இருந்த கடையொன்றில் இருந்து தீயணைக்கும் கருவியை எடுத்து அணைத்துள்ளார்.

தாய், தந்தை மற்றும் மகள் பயணித்த முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்ததுடன் தந்தையே முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார்.

மூவருக்கும் விபத்து ஏதும் ஏற்படவில்லை என தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!