பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும்
Kanimoli
2 years ago
எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை விதித்தமை மற்றும் கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முட்டை உற்பத்தியாளர்களில் 50 வீதமானவர்கள் தற்போது முட்டை உற்பத்தியை கைவிட்டுள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.