இலங்கை கொழும்பு வெள்ளைவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்டிய கடற்கரை பகுதியில் மிக அபாயமான நில அரிப்பு

Kanimoli
2 years ago
இலங்கை கொழும்பு வெள்ளைவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்டிய கடற்கரை பகுதியில் மிக அபாயமான நில அரிப்பு

இலங்கை கொழும்பு வெள்ளைவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்டிய கடற்கரை பகுதியில் மிக அபாயமான நில அரிப்பு ஏற்பட்டுக்கொண்டுள்ளதாக வெள்ளைவத்தை மீனவர் சங்க உறுப்பினர் குறை கூறியுள்ளார்கள். நில அரிப்புக்களால் பல சிறிய நாடுகள் கடலில் மூழ்கிக்கொண்டு வருவதை நாம் அறிவோம். 

அவ்வகையில் இலங்கையில் வெள்ளைவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்டிய பகுதிகள் நில அரிப்புக்கு உள்ளாகி உள்ளது. 
இதை அதன் பொறுப்பான அதிகாரி கண்டாலும் இன்னமும் தகுந்த தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லையாம் என அப்பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் மக்கள் குறை விளம்பியிருக்கிறார்கள். 
அவர்கள் lanka4.com செய்தி தளத்துக்கு மேலும் தெரிவிக்கையில், 
port city அமைக்க ஆரம்பித்ததன் பிற்பாடே இப்படியான அரிப்பு அதிகரித்ததாகவும், அதற்க்கு முன்னர் ஒரு சீசனுக்கு மணலை அலையே கொண்டுவந்து குவிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது வெறும் மண் கோதல் மட்டுமே கரையில் ஏற்படிகிறதாம். 
அது மட்டுமல்லாமல் கரையில் பிடிக்கப்படும் மீன்களின் அளவிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
 
எதுவாக இருந்தாலும் எமது நாட்டை காக்கவேண்டிய பொறுப்பு மக்களாகிய எமக்கே எனவே இதற்கான நடவடிக்கையை பொறுப்பானவர்கள் முடிக்கும் வரை அனைவருக்கும் பகிருங்கள். 
நாம் lanka4.com எமது கடமையை செய்வதில் திருப்திகொள்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!